Thursday, February 5, 2015

Public IP Address -என்றால் என்ன? - நிர்வகிப்பது யார்?




Public IP Address  -என்றால் என்ன என்பதனை நாம் ஏற்கனவே ,

Private IP Address , Public IP address - வேறுபாடு என்ன?

 என்ற பதிவில் பார்த்தோம்.

Public IP Address - ஆனது, Internet Assigned Numbers Authority (IANA)  எனும் 
 சர்வதேச அமைப்பினால் நிர்வகிக்கப்டுகிறது. 




எனவே,  இணையத்தொடர்பில் உள்ள எந்த இரு கணினியும் ஒரே நேரத்தில் ஒரே Public IP Address பெற வாய்ப்பில்லை.

IANA- அமைப்பானது Public IP Address - களை 

Regional Internet Registry (RIR)

எனும் அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கிறது.


RIR - அமைப்புகளும் உலகில் அவற்றின் கட்டுப்பாட்டுப் பகுதிகளும் கீழ்க்கண்ட வரைபடத்தில் உள்ளன:







Regional Internet Registry (RIR) அமைப்பானது தனக்கு ஒதுக்கப்பட்ட Public IP Address - களை 


National Internet Registry (NIR)


எனும் அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கிறது.



National Internet Registry (NIR) அமைப்பானது  தனக்கு ஒதுக்கப்பட்ட Public IP Address - களை 

local Internet registry (LIR)

எனும் அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கிறது.



local Internet registry (LIR)  அமைப்பானது  தனக்கு ஒதுக்கப்பட்ட Public IP Address - களை

ISP -(Internet Service Providers ) எனப்படும்  இணையசேவை வழங்கும் நிறுவனங்களுக்கு  பகிர்ந்து அளிக்கிறது.

ISP -நிறுவனங்கள்  தனக்கு ஒதுக்கப்பட்ட Public IP Address - களை தனது வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கின்றன.

...