Friday, June 30, 2017

அ. for.. அலைச்சல்! ஆ..for... ஆதார்!!
ஆதார் எண்ணை இன்னும் எதெதுடன் இணைக்கச்சொல்லி மத்திய அரசு மக்களை அலைய விடப் போகிறதோ தெரியவில்லை.

அப்பாவி மக்கள் எல்லோரும் ஆதார் கார்டை வைத்துக்கொண்டு தெருத்தெருவாக திருவிழாவில் காணாமல் போன குழந்தையைப் போல் அலைந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆதார் சேவைகளை ஆன்லைன் மூலம் பெற சில தகவல்களை இணைத்துள்ளேன்.மேலும் சில தகவல்களை அடுத்த பதிவில் பதிவிடுகிறேன். நன்றி! வணக்கம்!!


ஆதார் கார்டில் திருத்தம் செய்ய......

https://ssup.uidai.gov.in/web/guest/update


ஆதார் எண்ணை பான்கார்டு எண்ணுடன் இணைக்க:

https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html


உங்களுடைய ஆதார் எண்ணை கண்டுபிடிக்க....

https://resident.uidai.gov.in/find-uid-eid


இ-ஆதார் பதிவிறக்கம் செய்ய....

https://eaadhaar.uidai.gov.in/தமிழ்நாடு ஸ்மார்ட் கார்டில் திருத்தங்கள் செய்ய மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணைக்க...


https://tnpds.gov.in/


.....

Wednesday, May 10, 2017

மதில் மேல் மந்தி(ரி)கள் 
சித்தி சகலகலா மற்றும் T.DVD மாமா  க்கு.....

கடைக்கோடித் தொண்டன் போட்ட ஓட்டுக்களைப் பொறுக்கி பதவிக்கு வந்து, கூவத்து பாரிலே நீங்கள் வீசிய கோடிகளையும் பொறுக்கி எடுத்துக் கொண்ட ஒரு ............  எழுதும் கடுதாசி.

நாய் விற்ற காசு குறைக்காது என்பார்கள். நான் உங்களிடம் வாங்கிய காசுக்கு மேலேயே உங்கள் குடும்பத்தைப் புகழ்ந்து ஆயா டிவியில் அளவுக்கு மீறி குரைத்து விட்டேன்.

எடுபுடிச்சாமிக்கு நம்பிக்கை வாக்களிக்க சொன்னீர்கள். கூவத்து பார் குதூகலத்துடனே சட்டசபைக்குள் நுழைந்து சட்டென கையை உயர்த்தி விட்டேன்.

அதன் பின்விளைவுகள் என்ன தெரியுமா?

அதைக் கேட்டால் அம்மா இறந்த போது ஆனந்தக் கண்ணீர் வடித்த உங்கள் கண்களிலேயே ரத்தக் கண்ணீர் வரும்.

சொல்கிறேன் கேளுங்கள்...

தொகுதிப்பக்கம் எட்டிப்பார்த்தாலே துடைப்பக்கட்டைகள் என் முகரைக்கட்டையை நோக்கி முன்னேறி வருகின்றன.

கார் கண்ணாடியை இறக்கினாலே காரித் துப்பி கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள்.

அழுகிய முட்டையை வீசி எனது மூங்சியிலே ஆம்லெட் போடுகிறார்கள்.

எனது சொந்த வீட்டிற்கே பிக்பாக்கெட் திருடன் போல பின்வாசல் வழியாக செல்லவேண்டிய நிலை உள்ளது.

கரை வேட்டி கட்ட ஆரம்பித்தபோதே கௌரவம் எனும் கால்சட்டையை கழற்றி வீசி எறிந்து விட்டுத்தான் கட்சிப்பணி ஆற்ற வந்தேன். 

எனவேதான் மக்கள் மாட்டுசாணத்தை முகத்திலே வீசினாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

சகலகலா, தின கரன்சி, சுதா கரன்சி, திவா கரன்சி, பாஸ் கரன்சி மட்டுமல்ல ஒரு கழுதைக்கு வாக்களிக்க சொன்னால் கூட கரன்சி வாங்கிக் கொண்டு கையை உயர்த்த காத்திருக்கிறேன்.

ஆனால்...

கூவத்து பாரிலே குடித்து விட்டு குத்தாட்டம் போட்டவனுக்கும் மூட்டுவலியாலே அங்கே ஓர் மூலையிலே முடங்கிக் கிடந்த எனக்கும் ஒரே பேமெண்ட் கொடுத்தால் கூட எனது மனது ஏற்றுக்கொள்ளும்.

 அதேநேரம்,

பேரம் பேசிய பேமெண்ட் ஒத்தை ருபாய் குறைந்தாலும் எனது கால்கள் ஓபிஎஸ் இல்லம் நோக்கி மூவ்மெண்ட் ஆகும் என எச்சரித்து...

 இக்கடித்தை தங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

சிறைக்கம்பிகளோடு நான் சொல்வதையும் சிறிது எண்ணிப் பாருங்கள்!

நன்றி! வணக்கம்!!

இப்படிக்கு எந்த அணிக்கு தாவுவது எனத்தெரியாமல் தவிக்கும் ஆயி அம்மா கட்சி சமஉ. க்களில் ஒருவன்!

Wednesday, December 21, 2016

எருமை சாணம் கிலோ எட்டாயிரம்!- புதிய தொழில் வாய்ப்பு!

மாட்டுச்சாணத்திற்கு தட்டுப்பாடு!
கிலோ 8 ஆயிரம் ருபாய் வரை விற்பனை! 


தமிழகம் முழுவதும் ஒரு மூத்திர சந்து கூட விடாமல் அதிமுக நிர்வாகிகளால் வைக்கப்பட்டு இருக்கும் பேனர்கள் மற்றும் ஒட்டப்பட்டுள்ள சின்னம்மா படங்களின் மீது சாணத்தை வீசி அடிக்க ஆத்திரத்துடன் திரியும் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களால் தமிழ்நாடு முழுவதும் மாட்டுச்சாணத்திற்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. 

சாண அபிசேகத்திற்காக ஆங்காங்கே தெருக்களில் சிதறிக் கிடக்கும் மாட்டுச் சாணத்தை தொண்டர்கள் அகலமான பாத்திரங்களில் அள்ளிச் சென்று விடுகின்றனர்

இந்த சாண அபிசேகம் பிரச்சினையால் சாணத்திற்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டு மார்கழி மாதத்தில் வீட்டுவாசலில் தெளிக்க போதிய அளவு சாணம் கிடைக்காமல் குடும்பப் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் மாடுகள் உண்பதற்கு வைக்கோல் கிடைக்காததால் வால்   போஸ்டர்களையே தின்று உயிர் வாழ்கின்றன. எனவே அவை போடும் சாணங்களில் பசைத்தன்மை குறைந்தே காணப்படுகிறது.
இதனால் சின்னம்மா போஸ்டர் மீது ஒரு தடவைக்கு நான்கு தடவையாக அடித்தால்தான் பசக் கென்று மூஞ்சியின் மீது ஒட்டுகிறது. 

இதனால் கை வலியால் களைப்படைந்து விடும் உண்மை தொண்டர்கள் தரமான ஒரிசினல் சாணம் வாங்குவற்காக கிராமங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சில மாட்டுச்சாண வியாபாரிகள் மாட்டுச்சாணத்துடன் மனிதன் உள்ளிட்ட இன்னபிற விலங்குகளின் சாணத்தை கலப்படம் செய்து விற்று நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். 

இதனால் இந்த புதுவகையான சாணங்கள் அடிக்கப்ட்ட பேனர்கள் அருகில் நடந்து செல்ல நேரிடும் பொதுமக்கள் ஒரு வித வித்தியாசமான துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டு மூக்கைப் பொத்தியபடி அதை கடந்து செல்கின்றர்.

எனவே சாணம் அடிக்கப்பட்ட சின்னம்மா பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அருகில் பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என பொதுநலன் கருதி எச்சரிக்கப் படுகிறது.

...

Friday, July 15, 2016

பிரிண்டர்களை கண்காணிக்கும் மென்பொருள்...TO COUNT PRINT OUTS! • ஒரு சில பிரிண்டர்கள் மற்றும் காப்பியர்களில் எத்தனை பிரிண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற விபரங்களை தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. ஆனால் பெரும்பாலான பிரிண்டர்களில் இந்த வசதி கிடையாது.
 • அதனால்..
 • அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த தேவைகளுக்காக பிரிண்டர்களைப் பயன்படுத்துவதை அறிந்து கொள்ள முடியாமல் போகிறது.

 • இதனால் பிரிண்டர்களில் டோனர் மற்றும் இங்க் சீக்கிரம் தீர்ந்து விடும்.பிரிண்டரும் சீக்கிரம் பழுதடைந்து விடும்.

 • சாதாரண பிரிண்டர்களில் இந்த வசதி இல்லா விட்டாலும்  ஒரு சில மென்பொருட்களைப் பயன்படுத்தி நாம்  இந்த வசதியைப் பெறலாம்.

 •  எப்படி?

 • பிரிண்டர் இணைக்கப்ட்டுள்ள கணினியில் கீழ்கண்ட மென்பொருளை தரவிறக்கம் செய்து  Install  செய்ய வேண்டும்.
 • lhttp://www.papercut.com/download/?http=https%3A%2F%2Fcdn.papercut.com%2Ffiles%2Fprint-logger%2Fcurrent%2Fpapercut-print-logger.exe

 • இந்த மென்பொருள் உதவியுடன் கீழ்க்கண்ட தகவலை நாம் பெற முடியும்.

 • 1. பிரிண்ட் எடுக்கபட்ட நேரம்.
 • 2. பிரிண்ட் யாரால் எடுக்கப்பட்டது?
 • 3. மொத்தம் எத்தனை பக்கங்கள் பிரிண்ட் எடுக்கப்பட்டது?

 • என்பது போன்ற மேலும் பல தகவல்கள் நாள் மற்றும் மாதம் வாரியாக ஒரு Excel File  ல் தொடரந்து சேமிக்கபடும்.


 • TO COUNT HOW MANY PAGES PRINTED IN YOUR LOCAL PRINTER....

THIS SOFTWARE IS USED TO GET DETAILS ABOUT:

 • 1. the time of print,
 • 2. the name of the user who printed,
 • 3. the total number of pages,
 • 4. document names and titles,
 • 5. other print job attributes such as paper size, color mode and more.
Print audit logs are available in a viewer friendly HTML format, or in CSV or Excel format.

....

Monday, September 21, 2015

what is WEB HOSTING? - WEB HOSTING என்றால் என்ன?
ஒரு இணையதளம் அல்லது ஒரேயொரு இணையப்பக்கம் நாம் உருவாக்கி விட்டதாக வைத்துக்கொள்வோம்.

அதனை இணையம் அதாவது Internet மூலமாக உலகம் முழுவதும் பார்வையிடும்படி செய்வது  WEB HOSTING எனப்படும்.

WEB HOSTING செய்வதற்கு தேவையானவை என்ன?...


1.  ஓர் இணையதளம் அல்லது இணையப்பக்கம் (A Web Site or  Web Page)

2. ஒரு வெப் செர்வர் (Web Server - for Example : IIS Web Server).

3.  இணைய வசதி.- (High Speed Internet Connection)   இணைய வசதி கொண்ட ஒரு கணினியில் WEB SERVER - எனும் ஒரு Application - ஐ Install செய்து, அந்த Web Server - ல் ஒரு இணையதளத்தை இணைத்துவிட்டால் அதாவது Web Hosting செய்து விட்டால் அந்த இணையதளத்தினை உலகில் இணைய வசதிகொண்ட அனைத்து கணினிகளில் இருந்தும் பார்வையிட முடியும்.

இப்போது ஒரு இணையப்பக்கத்தை Web Hosing செய்வது எப்படி என பார்ப்போம்.

அதற்கு முன்....

1.

2. 

3.

 உங்கள் கணினியில் IIS Web Server நிறுவுவது எப்படி?ஆகிய மூன்று பதிவுகளையும் படித்துவிட்டு மேற்கொண்டு தொடரவும்.

நாம் ஏற்கனவே mysite.html எனும் ஒரு இணையப்பக்கத்தினை தயார் செய்து விட்டோம். 

நாம் ஏற்கனவே IIS - வெப் செர்வரை நமது கணினியில் நிறுவி விட்டோம்.

அந்த mysite.html இணையப்பக்கமானது தற்போது நமது கணினியில் மட்டுமே பார்வையிட முடியும். 

அந்த mysite.html எனும் இணையப்பக்கத்தினை IIS Web Server - ஐப் பயன்படுத்தி எப்படி  Web Hosting செய்வது,  அதாவது உலகம் முழுவதும் பார்வையிடச் செய்வது எப்படி எனப் பார்ப்போம்.

1.   C:\ சென்று inetpub எனும் Folder-  ஐ  Open செய்யவும்.

2.  அதில் உள்ள wwwroot எனும் Sub Folder - ஐ  Open செய்யவும்.

3.   நமது கணினியின் Desktop பகுதியில் ஏற்கனவே நாம் உருவாக்கிய mysite.html      எனும் இணையப்பக்கத்தினை Copy  செய்து இந்த  wwwroot எனும் Folder- க்குள்       Paste செய்யவும்.4. Start -> Search Programs (or) Run  சென்று inetmgr என்று  Type செய்யவும்.
      
5.  இப்போது IIS Web Server ஆனது Open ஆகும்.


6. உங்கள் கணினியின் பெயரில் தெரியும் Local Host -ஐ Righ Click செய்து , Start என்பதனை Click  செய்யவும்.இப்போது உங்கள் IIS Webserver -ஆனது முறைப்படி இயங்கத் தொடங்கும்.

(இங்கு குறிப்பிடப்படும் Localhost என்பது உங்கள் கணினியின் பெயரில் இருக்கும்.)7. பின்னர்  Local Host-ஐ  Expand செய்து அதில் வரும் Default Web Site என்பதனை Right Click செய்து Swich to Content View - என்பதனை Click  செய்யவும்.


8. இப்போது வலது புறத்திலுள்ள Default Web Content எனும் பகுதியின் கீழ் உங்களது mysite.html எனும்  இணையப்பக்கமும் இணைந்திருப்பதைக் காணலாம்.9.  ஒருவேளை உங்கள் mysite.html எனும் இணையப்பக்கமானது IIS Web Server - ல் மேற்கண்டவாறு காணப்படவில்லை எனில்  Default Web Site --ஐ Right Click  செய்து Manage Web Site  சென்று Restart என்பதனை Click செய்யவும்.


10. இப்போது உங்கள் mysite.html எனும் இணையப்பக்கமானது Hosting  செய்யப்பட்டு விட்டது. 

இப்போது ஏதாவது ஒரு Browser  -ஐ Open செய்து  Address Bar -ல் 

http://localhost/mysite.html  

அல்லது 

http://127.0.0.1/mysite.html

என டைப் செய்து Enter கொடுத்தால் உங்கள் mysite.html  இணையப்பக்கமானது IIS Web Server  - ல் முறைப்படி Hosting  செய்யப்பட்டுள்ளதை கீழ்க்கண்ட படத்தில் உள்ளவாறு தெரிவதை வைத்து அறிந்து கொள்ளலாம்.

127.0.0.1 என்ற  IP Address -ஆனது ஒரு கணினியின் Loop Back Address - என அழைக்கப்படுகிறது. 

அதாவது ஒரு கணினியிலிள்ள ஒரு HTTP செர்வருக்கு அதே கணினியிலுள்ள ஒரு HTTP Client ஆனது Request அனுப்பி Response  பெறுவதற்கு பயன்படும் ஒரு IP Address ஆகும்.

இந்த IP Address - ஆனது எல்லா கணினிகளுக்கும் பொதுவாக பயன்படுத்தப்படும் Loop Back IP Address ஆகும்.

சரி இப்போது நாம் ஒரு இணையப்பக்கத்தினை ஒரு கணினியில் Hosting செய்து அதே கணினியில் சோதித்துப் பார்த்து விட்டோம்.

 கணினியானது LAN - ல் இணைக்கப்பட்டிருக்கிறதா?

எனில், உங்கள் இணையப்பக்கத்தினை அந்த LAN -ல் இணைக்கப்பட்டுள்ள வேறொரு கணினியில் பார்வையிடுவோம். 

எப்படி?...

LAN - ல் ஒவ்வொரு கணினிக்கும் ஒரு பிரத்தியேக Private  IP Address - ஆனது கொடுக்கப்பட்டிருக்கும்.

உங்கள் கணினியின் Private IP Address தெரிந்து கொள்ள Command Mode -சென்று ipconfig என டைப் செய்தால் உங்கள் கணினியின் Private IP Address தெரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக உங்கள் கணினியின் IPv4 Address ஆனது மேற்கண்ட படத்தில் உள்ளதுபோல் 192.168.1.135 என வைத்துக்கொள்வோம்.

இப்போது உங்கள் கணினி இணைந்துள்ள LAN Network - ல் உள்ள வேறு ஒரு கணினியில் Browser - ஐ Open  செய்து Address bar -ல் http://192.168.1.135/mysite.html  என டைப் செய்து Enter கொடுத்தால் உங்கள் இணையப்பக்கத்தினை அந்த கணினியில் பார்வையிட முடியும்.


Hosting செய்யப்பட்ட உங்கள் இணையப்பக்கத்தினை அதே கணினியிலும் பின்னர் LAN - ல் இணைந்துள்ள மற்றொரு கணினியிலும் பார்வையிட்டு விட்டோம். 

இப்போது உங்கள் இணையப்பக்கத்தினை உலகில் உள்ள மற்ற அனைத்துக் கணினிகளிலும் எப்படி பார்வையிடச் செய்வது என்பதனை அடுத்த பதிவில் பார்ப்போம்.


....
Friday, September 18, 2015

How to install IIS Web server ? - உங்கள் கணினியில் IIS Web Server நிறுவுவது எப்படி?


உங்கள் கணினியில் Microsoft -  நிறுவனத்தின் IIS Web Server  நிறுவ வேண்டுமா?


ஒரு சில முக்கியமான Application - கள்  Windows Operating System -ல் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும். 

அவற்றை நாம் தனியாக Install  செய்ய வேண்டியதில்லை. 

தேவைப்படும்போது அவற்றை Enable  செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேவையற்றபோது அவற்றை  Disable செய்து வைக்கலாம்.

IIS Web Server - ம் அது போன்று Windows Operating System - ல் ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு Application  ஆகும்.


நாம் அந்த Application - னை  Enable செய்தால் போதும். 

எப்படி?....

1.முதலில்  Control Panel செல்லவும்.2.  Programs -என்பதனை Click  செய்யவும்.3. Programs and Features - என்ற தலைப்பின் கீழ் உள்ள Turn Windows futures on or off - என்பதனை Click செய்யவும்.


4. பின்னர் வரும் Dialog Box - ல் என்ற Internet Information Services - தலைப்பினை Expand - செய்து கீழ்க்கண்ட படங்களில் உள்ளவாறு தேவையான Service - களை  Select செய்யவும்.

5.கடைசியாக Ok  Button -ஐ Click செய்யவும்.இப்போது உங்கள் கணினியில் IIS Web Server ஆனது பயன்பாட்டிற்கு வரும்.

உங்கள் கணினியில் IIS Web Server - ஆனது நிறுவப்பட்டுள்ளதா என்பதனை தெரிந்து கொள்ள....

1. c:\  - ல்  inetpub என்ற Folder  உருவாகியிருக்கும்.

2. Browser ல் http://localhost என டைப் செய்து Enter கொடுத்தால் கீழ்க்கண்ட படம் திரையில் வரும்.

இப்போது உங்கள் கணினியில் IIS Web Server - நிறுவப்பட்டதை உறுதி செய்து விட்டீர்கள்.


 IIS Web Server - பயன்படுத்துவது எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.


(குறிப்பு: மேற்கண்ட அனைத்து செய்முறைகளும் Microsoft - ன் Windows 7 க்கான வழிமுறைகளாகும். 

Windows XP- ல் Install செய்யும்போது    XP  CD - ஐ CD Drive- வில் போட்டு வைத்து விட்டு மேற்கண்ட செய்முறைகளை செய்யவேண்டும்.)

.....


Thursday, September 3, 2015

What is Web Server?- வெப் செர்வர் என்றால் என்ன?வெப் செர்வர் என்பது  ஒரு Application அல்லது ஒரு Software  ஆகும். 

( ஆனால் சில சமயங்களில் வெப்செர்வர் Application பயன்படுத்தப்படும் கணினிகளும் வெப்செர்வர் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.)

இணையம் அதாவது  INTERNET ஆனது   , Client- Server முறையில் செயல்படுகிறது. 

இணையத் தொழில்நுட்பத்தில்...

வெப் செர்வர் என்பது SERVER எனில் CLIENT என்பது எது ?

அதுதான்  Browser ஆகும்.

உதாரணமாக நீங்கள் பயன்படுத்தும் Internet Explorer, firefox, Google Chrome போன்ற அனைத்து Browser -  களும்  Client softwares - ஆகும்.

Client -கள் கேட்கும் தகவலை கொடுக்க வேண்டியது ஒரு Server - ன் பணி.

CLIENT தகவல் கேட்கும் செயல் - REQUEST எனப்படும்.

SERVER தகவல் கொடுக்கும் செயல் - RESPONSE  எனப்படும்.


ஒவ்வொரு வெப் செர்வரும் ஒரு - Default Folder ஐ க் கொண்டிருக்கும். 

அந்த Folder - க்குள் நமது இணைய பக்கங்களை சேமித்து வைக்க வேண்டும்.அப்படி வைக்கும் போது நமது இணையப்பக்கங்களானது உலகில் மற்றவர்களால் பார்வையிட முடியும்.

Default Folder அல்லாமல் வேறொரு இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இணையப்பக்கங்களையும் Virtual Directory  என்ற முறையில் பயன்படுத்தலாம்.

உலகில் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு வெப்செர்வர் Software களின் பெயர்களைத் தெரிந்து கொள்ள...


என்ற பதிவினை படிக்கவும்.


நாம் ஏற்கனவே சென்ற பதிவில் mysite.html என்ற பெயரில் உருவாக்கிய ஒரேயொரு இணையப்பக்கத்தை ஒரு வெப் செர்வர் மூலமாக எப்படி உலகத்திலுள்ள மற்றவர்களை பார்வையிட செய்வது என்பது பற்றி முதலில் பார்ப்போம்.

நாம் முதலில் எந்த வெப் செர்வரை பயன்படுத்துவது என்று முடிவு செய்ய வேண்டும்.

MicroSoft -நிறுவனத்தின் IIS -Internet Information Services எனும் வெப் செர்வரை பயன் படுத்துவது பற்றி பார்ப்போம்.....


......

Thursday, August 27, 2015

இணையதளம் உருவாக்குவது எப்படி? - How to Make a Website?
சாதாரணமாக ஒரு புத்தகம் (Book) என்பது பல்வேறு பக்கங்களின்  (Pages) தொகுப்பு ஆகும்.

ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்துக்கள் (Texts)  மற்றும் படங்கள் (Images) இருக்கும்.

அதுபோலவே ஒரு இணையதளம் (Website) என்பது பல்வேறு இணையப் பக்கங்களின் (Web Pages) தொகுப்பாகும்.

ஒவ்வொரு இணையப்பக்கமும் (Web Page)  எழுத்துக்கள்(Text), படங்கள் (Images), ஒலி(Audio), ஒளி(Videos) மற்றும் பல்வேறு மல்டிமீடியா(Multimedia) தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

ஒரு இணையதளத்திற்கு தேவையான இணையப்பக்கங்கள்(Web Pages), படங்கள்(Images) ஒலி(Audio) மற்றும் வீடியோ(Video) ஆகியவை அனைத்தும் ஒரு Folder - க்குள் வைக்கப்பட்டிக்கும்.

ஒரு புத்தகத்தின் முதல் பக்கம் Index Page எனப்படுகிறது. அதில் எந்தெந்த பக்கங்களில் என்னென்ன தலைப்பில் தகவல்கள் உள்ளன என்ற விபரம் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

அது போலவே ஒரு ஒரு இணையதளத்தின் முதல் இணையப்பக்கமானது Home Page என அழைக்கப்படுகிறது.

நீங்கள் ஒரு இணையதளத்தை பார்வையிடும்போது தெரியும் முதல் பக்கமே அந்த இணையதளத்தின் Home Page ஆகும்.

ஒரு இணையதளத்தின் நூற்றுக்கணக்கான இணையப்பக்களில் எந்த இணையப் பக்கம் Home Page - ஆக இருக்க வேண்டும் என்பதை அந்த இணையதளத்தை உருவாக்கியரே முடிவு செய்ய வேண்டும்.


இப்போது ஒரு சிறிய இணையப்பக்கத்தை (Web Page) உருவாக்குவது பற்றி பார்ப்போம்....

Notepad - ஐ திறந்து கீழ்கண்டவற்றை டைப் செய்யவும்...முடித்தவுடன் அந்த File - ஐ "mysite.html" என்று பெயர் கொடுத்து Desktop - ல்  Save செய்யவும்.

நினைவில் கொள்ளுங்கள். File name  ஆனது " " க்குள் கொடுத்து Save  செய்யவேண்டும்.

பின்னர் Desktop சென்று பார்த்தால் அந்த File ஆனது ஒரு WebPage ஆக ஆகியிருப்பதை பார்க்கலாம்.

இப்போது அந்த Web Page - ஐ Double Click செய்யவும்.

அந்த Web Page ஆனது தானாகவே Browser மூலமாக Open ஆகும்.இப்போது நாம் mysite.html என்ற ஒரேயொரு WebPage உருவாக்கி விட்டோம்.


இதுபோன்று பல Web Page - களை இணைத்து ஒரு WEB SITE உருவாக்கலாம்.

சரி. ஒரு இணையதளத்தை உருவாக்கி விட்டோம். அதை நாமே நமது கணினியில் பார்ப்பதற்கா உருவாக்கினோம்?

உலகமே அதை பாரக்க வேண்டாமா?

அதற்குத்தான் வெப் செர்வர் ( Web Server)  பயன்படுகிறது.


நாம் உருவாக்கிய இணையதளத்தை ஒரு போல்டருக்குள் பொட்டலம் போல கட்டி அதை வெப் செர்வர் எனும் ஒரு அப்ளிகேசனை திறந்து அதில் தூக்கி அந்த பொட்டலத்தை போட்டு விட்டால் உலகமே உங்கள் இணைய தளத்தை பார்வையிட முடியும்.

எப்படி செய்வது?

அடுத்த பதிவில் பார்ப்போம்......

....

RUN YOUR OWN WEBSITE FROM HOME -வீட்டிலிருந்தே இயக்கலாம் உங்கள் சொந்த இணையதளம்!
ஒரு பைசா செலவில்லாமல் உங்கள் சொந்த இணையதளத்தை உலகம் முழுவதும் பார்வையிட செய்யலாம்!

எப்படி?முதலில் இணையம் அதாவது  Internet எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ள எனது முந்தைய பதிவுகளை படிக்கவும்.

வீட்டிலிருந்தே உங்கள் சொந்த இணையதளத்தை இயக்குவது பற்றி தெரிந்து கொள்ள எனது அடுத்தடுத்த பதிவுகளை தொடர்ந்து படிக்கவும்.....

அடுத்த பதிவில் இணையதளம் உருவாக்குவது பற்றி பார்ப்போம்!

....Wednesday, August 26, 2015

Access Linux from Windows - விண்டோஸ் கணினியிலிருந்து லினக்ஸ் கணினியை இயக்க...ஒரு நிறுவனத்தில் ஒரே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள அனைத்துக் கணினிகளிலும் விண்டோஸ் இயங்குதளம் உள்ளது.

அத்தனைக் கணினிகளிலும் லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படுகிறது எனில்....

அனைத்துக் கணினிகளிலும் லினக்ஸ் இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை.

ஏதாவது ஒரு கணினியில் லினக்ஸ் இன்ஸ்டால் செய்து அந்த கணினியை மற்ற அனைத்து விண்டோஸ் கணினிகளும் இயக்க முடியும்.

முதலில் ஏதாவது ஒரு கணினியில் லினக்ஸ் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

பிறகு அந்த லினக்ஸ் கணினிக்கு  அந்த நெட்வொர்க்கில் இணையும்படி  ஒரு IP Address கொடுக்க வேண்டும்.

உதாரணமாக:  192.168.1.123

பின்னர் PuTTY.exe என்ற  ஒரு Software -    கீழ்க்கண்ட  இணையதளத்திலிருந்து  Download செய்து அதை  மற்ற அனைத்து விண்டோஸ் கணினிகளிலும் நிறுவ வேண்டும்.


இப்போது விண்டோஸ் கணினியில் PuTTY.exe  - திறந்து லினக்ஸ் இன்ஸ்டால் செய்த கணினியின்  IP Address கொடுக்க வேண்டும்.

பின்னர்  PuTTY.exe - ல் லினக்ஸ் கணினியின் UserName மற்றும்  Password உள்ளீடு செய்தால்...

விண்டோஸ் கணினியிலிருந்து லினக்ஸ் கணினியை இயக்க முடியும்.

இதே முறையில் ஒரேயொரு லினக்ஸ் கணினியை மற்ற எல்லா விண்டோஸ் கணினிகளும் ஒரே நேரத்தில் இயக்கலாம்.

......

Monday, August 24, 2015

WEB SERVER - வலை சேவையகம்


ஒரு இணையதளத்தை உலகம் முழுவதும் பார்வையிட பயன்படும் சில பிரபலமான Web Server - களின் பெயர்கள் கீழே உள்ளன.

Apache web server - the HTTP web server

Apache Tomcat

Internet Information Services (IIS)

Nginx web server

lighttpd

Jigsaw

Klone

Abyss web server

Oracle Web Tier

X5 (Xitami) web server

Zeus web server


மேலும் இது போன்ற நிறைய WEB SERVERS பயன்பாட்டில் உள்ளன. அவற்றின் பெயர்கள் மற்றும் விபரங்களை அறிய :


 பக்கத்திற்கு செல்லவும்.

....

Tuesday, August 11, 2015

குடி கெடுப்போம்!
மாபெரும் கூட்டத்திற்கு வந்திருக்கும் மது விலக்கு மன்னர்களே!
மடாகுடிகாரர்களே!

எனது கட்சிக்காரர்கள் பெரும் குடி மக்கள்தான் என்பதில் கட்டிங் அளவும்  சந்தேகம் இல்லை.

ஏன் குடித்தார்கள் எனது கட்சிக்காரர்கள்?

இத்தனை ஆண்டுகளாய் எனது கழகக் கண்மணிகள் மூத்திர சந்துகளில் முட்டு முட்டாக நின்று கொண்டு மதுவை குடித்தே ஒழித்தார்கள்.

அந்த வீராதி வீரர்களை வீம்புக்கு இழுக்கவேண்டாம் என்று வீராப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் எதிர்க்கட்சிக்காரர்களுக்கு சவால் விடுகிறேன்!

இதோ இந்த கூட்டம் நடக்கும் இடத்தை சுத்தி இருவது சொச்சம் டாஸ்மாக் கடைகளிலே எந்தக்கடையிலாவது ஒரு கட்டிங் சரக்கு மிச்சம் கண்ணால் பார்க்க முடியுமா?

அத்தனை பாட்டில்களையும் அடித்து ஒழித்தால் அராசகம் செய்கிறார்கள் என்று அவப்பெயர் உண்டாக்கிவிடுவார்கள் என்பதால் காசுக்கு வாங்கி அத்தனை சரக்குகளையும் குடித்தே அழித்து விட்டார்கள் எவ்வளவு குடித்தாலும் தாங்கும் எஃகு குடல் கொண்ட எனது கழகக் கண்மணிகள்.


ஒரு கீரைக்கட்டு வாங்க கிழக்கும் மேற்குமாக யோசிக்கும் எனது கட்சிக்காரன் அரைபாட்டில் சாராயத்திற்காக அடிவயிற்றில் அநாவசியமாக இருக்கும்  கிட்னியையே அடகு வைக்கக்கூட தயங்கமாட்டான் என்பதை ஆணித்தரமாய் அடித்துக் கூறுகிறேன்.

சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னோம் என்பதற்காக உண்மையிலேயே இந்த அரசு இறுமாப்புடன் பூரண மதுவிலக்கை கொண்டுவந்து தொலைக்குமேயானால் அதற்காக சோர்ந்துபோய் சோடை போகமாட்டான் எனது சொந்தக்கட்சிக்காரன்.

பஸ் ஏறிப்போய் பாண்டிச்சேரி சென்று பார்களிலே படுத்து உருண்டு கிடப்பான்.

அல்லது கால்நடையாகவே காரைக்கால் சென்று கடலில் காத்து வாங்கியபடியே கட்டிங் அடிக்கத் தயங்க மாட்டான் என்பதை கடுமையாக தெரிவித்துக்கொள்கிறேன்.

பூரண மதுவிலக்கு என்ற வார்த்தையை படித்து பொதுமக்களுக்கு வேண்டுமானால் புல்லரிக்கலாம். ஆனால் குடித்து குடித்து குடல் செல்லரித்துப்போன எனது கட்சிக்காரன் அந்த கொடுஞ்சொல்லைக் கேட்ட அதிர்ச்சியிலே ஆயே போய்விடும் ஆபத்தும் உண்டு என்பதை அரசுக்கு அமைதியாக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

அதனால்தான் ஒருவேளை அடுத்த தேர்தலில் அசம்பாவிதமாக நாங்கள் ஆட்சிக்கு வர நேர்ந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்ற வார்த்தையை அடிக்கடி சொல்லி குடிகாரர்களின் குடல் குளிரச்செய்யும் வேலையை குத்துமதிப்பாய் செய்து வருகிறேன்.

சந்தனக் காடுகளிலே சாராயம் காய்ச்சி  சந்து பொந்துகளில் எல்லாம் விற்று சந்தோசமாய் வாழ்ந்த எனது சாதிக்கார சரித்திர நாயகர்களின் சல்லாப வாழ்க்கையை தரித்திரமாய் வந்த டாஸ்மாக் கடைகள் பீஸ் பீஸாய் கிழித்து போட்டதால்தான் அவர்கள் தார்ச்சாலை ஓரங்களிலே தயிர் விற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை இங்கே தயக்கத்துடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அதே நேரத்திலே....

புகை பிடிப்பதால் ஒருவன் புத்துணர்ச்சி பெறுகிறான் என்பதையும் காசநோய் வந்து  'லொக்கு லொக்கு' என்று இருமிக் கொண்டிருக்கும் ஒருவன் அருகில் தூங்குபவருக்கு அலாரமாகப் பயன்படுகிறான் என்பதையும் அரசியல் அநாதைகள் அறிந்து கொள்ள வேண்டும்.

புகை பிடித்தால் புற்று நோய் வருமே? என்று சில புண்ணாக்குகள் புலம்பினாலும், சிகரெட் குடித்தால் சீக்கு வருமே? என்று சில சில்வண்டுகள் சிணுங்கினாலும்,காசநோய் வந்து பலபேர் கல்லறைக்குப் போவார்களே? என்று  எனது மனசாட்சி மப்ளரைப் பிடித்து உலுக்கினாலும், காசு நோய்ப் பிடித்த எனது கஸின் பிரதர் சில்லரைக்கு விற்கும் சிகரெட்டுக்காக வாய் வலிக்க வக்காலத்து வாங்க வேண்டிய வலுக்கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆறு நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும் என்று சொல்லுவார்கள்.ஆனால் ஆறு நிறைய சாராயம் போனால் அதனை மள மளவென அள்ளிக் குடித்து மணல் தெரிய வைத்து விடுவார்கள் மானத்தை துச்சமென மதிக்கும் மந்தைக்கூட்டமாகிய எனது  கட்சிக் காரர்கள்  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

எத்தனை தடைகள் வந்தாலும் மதுவை ஒழித்தே தீருவோம் என்று நான் குடித்த குவார்ட்டர் மீது சத்தியம் செய்து இத்துடன் எனது உரையை முடித்துக்கொள்கிறேன்.

 நன்றி !வணக்கம்!!மக்கழே!!!

.....

Monday, August 10, 2015

ஆபாச இணையதளங்களை தடை செய்வது எப்படி?- How to block Porn websites?

ஒரு கணிப்பொறியில் ஆபாச இணையதளங்களை  பார்வையிட முடியாதவாறு எளிதாக தடை செய்யலாம்.

Preferred DNS Server 
மற்றும்
Alternate DNS Server 

ஆக கீழ்க்கண்ட IP Address - களை  நமது கணிப்பொறியில் கொடுக்க வேண்டும்.

 • 208.67.222.123

 • 208.67.220.123
FamilyShield nameservers
என்ற பெயரில் opendns.com எனும் இணையதளம் இந்த சேவையினை இலவசமாக வழங்குகிறது.
.....

Tuesday, April 28, 2015

சுட்டிப்பெண் சுண்டு - லூட்டி No:3.


                                          


சுண்டுவுக்கு பிடிக்காத பலகாரம் என்றால் பக்கத்தில் இருப்பவருக்கு அதை பாசமாக ஊட்டி விடுவாள்.

ஆனால் பிடித்த பலகாரம் என்றால்...........

அம்மா மண்டு  பணியாரம் சுட்டு அதில் நான்கைந்து எடுத்து தட்டில் வைத்து சுண்டுவிடம்  கொடுத்தாள்.

"பாப்பா! இதை தாத்தா கிட்ட கொடுத்துட்டு வா.  அப்புறம் நீ சாப்பிடலாம்'" 

தட்டை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள் சுண்டு.

அங்கே வாசலில் நின்றுகொண்டு செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார் தாத்தா.பணியாரம் வாசனை அவரது நாசியில் புகுந்து நாக்கில் எச்சிலை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

திரும்பிப் பார்த்தார்.

சுண்டு பணியாரத் தட்டுடன் நின்றுகொண்டிருந்தாள்.

"தாத்தா! உனக்கு பணியாரம் புடிக்காதா? ஏன் தாத்தா? சுகர் இருக்குன்னு சாப்பிட மாட்டியா?   சரி சரி நானே தின்னுக்கிறேன்"

 என்று சொல்லிவிட்டு....


தாத்தாவிடமிருந்து எந்தப்பதிலையும் எதிர்பார்க்காமல் தட்டில் இருந்த எல்லா பணியாரங்களையும் 'லபக்'  'லபக்' என்று நொடியில் விழுங்கினாள் சுண்டு.

தாத்தா வாயில் ஊறிய சலுவாய் வழிந்து  தரையை நனைத்துக் கொண்டிருந்தது.

.......

Sunday, April 26, 2015

சுட்டிப் பெண் சுண்டு!..... லூட்டி - No: 2


குண்டு சன்னல் வழியே எட்டிப்பார்த்தான்.

அவனுக்கு கடன் கொடுத்த கைலாசம் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

 உடனே சுண்டுவை அழைத்து, தான் வீட்டில் இல்லை என கைலாசத்திடம் சொல்ல சொல்லிவிட்டு ஒரு அறையில் ஒளிந்து கொண்டான்.

சுண்டு வீட்டு வாசலுக்கு வந்தாள்.

"பாப்பா! அப்பாவை கூப்பிடும்மா"

"அப்பா வீட்ல இல்ல. வெளியில போயிருக்காங்க."

"எப்பம்மா வருவாரு?"

"அதெல்லாம் என்கிட்ட சொல்லல. 'அந்த கடன்கார நாயி கைலாசத்துகிட்ட அப்பா வீட்ல இல்லன்னு சொல்லு' ன்னு மட்டும் தான் சொன்னாரு அப்பா. இருங்க கேட்டு சொல்றேன்"  
 என்று ....

குண்டு ஒளிந்திருந்த அறையை நோக்கி,

" அப்பா நீங்க எப்ப வீட்டுக்கு வருவீங்கன்னு கேட்கறாங்க இந்த மாமா. என்ன சொல்லணும்?"

 என்று கேட்டு,..

 கடன் காரன் கைலாசத்தின் கையில் குண்டுவின் காதை ஒப்படைத்தாள் சுண்டு.

...

சுட்டிப் பெண் சுண்டு!குண்டோதரன்  அதாவது குண்டுவுக்கும், மண்டோதரி   அதாவது மண்டுவுக்கும் பிறந்த 3 வயது சுட்டிப்பெண் சுண்டு. 

சுண்டுவின் லூட்டிகளை கண்டு பல் விழுந்த பாட்டிகளும் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும் என்பதற்காக இந்த தொடர்.......                                                                        .......................

லூட்டி-1


இரவு 12 மணி.

முகத்தில் ஓங்கி அடி விழுந்தது குண்டோதரனுக்கு.

வாரிச்சுருட்டி எழுந்தான்.

சுண்டு நின்று கொண்டிருந்தாள்.

"அப்பா! எனக்கு இப்பவே பந்து வாங்கிக் குடுங்க. நான் விளையாடணும்"

"இப்ப ஒரு கடையும் இருக்காதும்மா. எல்லாம் கடையச் சாத்திட்டு தூங்கப் போயிட்டாங்க."

"எனக்கு இப்பவே வேணும் ஙேஙே..........."  என்று அழ ஆரம்பித்தாள்.

மண்டு எழுந்து,

 "ஏங்க! உங்க செல்போன்லதான் பந்து விளையாடற மாதிரி கேம் இருக்கே. அதை எடுத்துக் குடுங்க "  என்றாள்.

குண்டுவும் பந்து விளையாட்டை செல்போனில் காண்பித்து, 

"இந்தா செல்லம்! பந்து விளையாடு" என்று கொடுத்தான்.

"இதை எப்படி விளையாடணும் தெரியுமா உனக்கு?"  என்று கேட்டான் குண்டு.

"எனக்கு நல்லாத் தெரியும். இப்ப பாருங்க எப்படி  விளையாடறேன்னு" என்று சொல்லிவிட்டு ,..............

செல்போனை 'சுட்டேர்'  என்று சுவற்றில் அடித்தாள்.

....

Thursday, February 5, 2015

Public IP Address -என்றால் என்ன? - நிர்வகிப்பது யார்?
Public IP Address  -என்றால் என்ன என்பதனை நாம் ஏற்கனவே ,

Private IP Address , Public IP address - வேறுபாடு என்ன?

 என்ற பதிவில் பார்த்தோம்.

Public IP Address - ஆனது, Internet Assigned Numbers Authority (IANA)  எனும் 
 சர்வதேச அமைப்பினால் நிர்வகிக்கப்டுகிறது. 
எனவே,  இணையத்தொடர்பில் உள்ள எந்த இரு கணினியும் ஒரே நேரத்தில் ஒரே Public IP Address பெற வாய்ப்பில்லை.

IANA- அமைப்பானது Public IP Address - களை 

Regional Internet Registry (RIR)

எனும் அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கிறது.


RIR - அமைப்புகளும் உலகில் அவற்றின் கட்டுப்பாட்டுப் பகுதிகளும் கீழ்க்கண்ட வரைபடத்தில் உள்ளன:Regional Internet Registry (RIR) அமைப்பானது தனக்கு ஒதுக்கப்பட்ட Public IP Address - களை 


National Internet Registry (NIR)


எனும் அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கிறது.National Internet Registry (NIR) அமைப்பானது  தனக்கு ஒதுக்கப்பட்ட Public IP Address - களை 

local Internet registry (LIR)

எனும் அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கிறது.local Internet registry (LIR)  அமைப்பானது  தனக்கு ஒதுக்கப்பட்ட Public IP Address - களை

ISP -(Internet Service Providers ) எனப்படும்  இணையசேவை வழங்கும் நிறுவனங்களுக்கு  பகிர்ந்து அளிக்கிறது.

ISP -நிறுவனங்கள்  தனக்கு ஒதுக்கப்பட்ட Public IP Address - களை தனது வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கின்றன.

...