Thursday, August 27, 2015

இணையதளம் உருவாக்குவது எப்படி? - How to Make a Website?




சாதாரணமாக ஒரு புத்தகம் (Book) என்பது பல்வேறு பக்கங்களின்  (Pages) தொகுப்பு ஆகும்.

ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்துக்கள் (Texts)  மற்றும் படங்கள் (Images) இருக்கும்.

அதுபோலவே ஒரு இணையதளம் (Website) என்பது பல்வேறு இணையப் பக்கங்களின் (Web Pages) தொகுப்பாகும்.

ஒவ்வொரு இணையப்பக்கமும் (Web Page)  எழுத்துக்கள்(Text), படங்கள் (Images), ஒலி(Audio), ஒளி(Videos) மற்றும் பல்வேறு மல்டிமீடியா(Multimedia) தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

ஒரு இணையதளத்திற்கு தேவையான இணையப்பக்கங்கள்(Web Pages), படங்கள்(Images) ஒலி(Audio) மற்றும் வீடியோ(Video) ஆகியவை அனைத்தும் ஒரு Folder - க்குள் வைக்கப்பட்டிக்கும்.

ஒரு புத்தகத்தின் முதல் பக்கம் Index Page எனப்படுகிறது. அதில் எந்தெந்த பக்கங்களில் என்னென்ன தலைப்பில் தகவல்கள் உள்ளன என்ற விபரம் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

அது போலவே ஒரு ஒரு இணையதளத்தின் முதல் இணையப்பக்கமானது Home Page என அழைக்கப்படுகிறது.

நீங்கள் ஒரு இணையதளத்தை பார்வையிடும்போது தெரியும் முதல் பக்கமே அந்த இணையதளத்தின் Home Page ஆகும்.

ஒரு இணையதளத்தின் நூற்றுக்கணக்கான இணையப்பக்களில் எந்த இணையப் பக்கம் Home Page - ஆக இருக்க வேண்டும் என்பதை அந்த இணையதளத்தை உருவாக்கியரே முடிவு செய்ய வேண்டும்.


இப்போது ஒரு சிறிய இணையப்பக்கத்தை (Web Page) உருவாக்குவது பற்றி பார்ப்போம்....

Notepad - ஐ திறந்து கீழ்கண்டவற்றை டைப் செய்யவும்...



முடித்தவுடன் அந்த File - ஐ "mysite.html" என்று பெயர் கொடுத்து Desktop - ல்  Save செய்யவும்.

நினைவில் கொள்ளுங்கள். File name  ஆனது " " க்குள் கொடுத்து Save  செய்யவேண்டும்.

பின்னர் Desktop சென்று பார்த்தால் அந்த File ஆனது ஒரு WebPage ஆக ஆகியிருப்பதை பார்க்கலாம்.

இப்போது அந்த Web Page - ஐ Double Click செய்யவும்.

அந்த Web Page ஆனது தானாகவே Browser மூலமாக Open ஆகும்.



இப்போது நாம் mysite.html என்ற ஒரேயொரு WebPage உருவாக்கி விட்டோம்.


இதுபோன்று பல Web Page - களை இணைத்து ஒரு WEB SITE உருவாக்கலாம்.

சரி. ஒரு இணையதளத்தை உருவாக்கி விட்டோம். அதை நாமே நமது கணினியில் பார்ப்பதற்கா உருவாக்கினோம்?

உலகமே அதை பாரக்க வேண்டாமா?

அதற்குத்தான் வெப் செர்வர் ( Web Server)  பயன்படுகிறது.


நாம் உருவாக்கிய இணையதளத்தை ஒரு போல்டருக்குள் பொட்டலம் போல கட்டி அதை வெப் செர்வர் எனும் ஒரு அப்ளிகேசனை திறந்து அதில் தூக்கி அந்த பொட்டலத்தை போட்டு விட்டால் உலகமே உங்கள் இணைய தளத்தை பார்வையிட முடியும்.

எப்படி செய்வது?

அடுத்த பதிவில் பார்ப்போம்......

....

No comments:

Post a Comment