Monday, August 31, 2009

கோமதி பாட்டியின் காசி யாத்திரை




கோமதி பாட்டி சோப்புத்தண்ணீரில் ஊறிக் கொண்டிருந்த தனது பல்செட்டை எடுத்து வாயில் மாட்டிக்கொண்டாள்.

வெற்றிலைப் பெட்டியின் உள்ளே மல்லாக்கப்படுத்து ஹாயாக உறங்கிக் கொண்டிருந்த வெற்றிலையாரை எடுத்து தனது உள்ளங்கையில் குப்புற படுக்க வைத்தாள் கோமதிபாட்டி.

தூக்கம் கலைந்து லேசாக கண்விழித்துப் பார்த்தார் வெற்றிலையார். கோமதி பாட்டி பாசமாக வெற்றிலையாரின் முதுகினை வருடி, மேலே ஒட்டியிருந்த தூசியை துடைத்து விட்டாள். பாசமாக வருடியதில் லயித்துப்போன வெற்றிலையார் மீண்டும் அயர்ந்து தூங்க ஆரம்பித்தார்.

பின்னர் சுண்ணாம்பு டப்பியில் இருந்து தனது ஆட்காட்டி விரலில் சிறிதளவு சுண்ணாம்பினை எடுத்து அதனை வெற்றிலையாரின் முதுகில் பரவலாக தடவிவிட்டாள்.

சுண்ணாம்பு பட்ட எரிச்சலில் அதிர்ச்சியாகி தூக்கம் கலைந்து வெற்றிலையார் சுதாரிப்பதற்குள் கோமதிபாட்டி அவரது காம்பு வாலை தனது விரலால் நறுக்கி தூர எறிந்தாள். வலியில் அலறித்துடித்த வெற்றிலையார் எழ முயற்சிக்கும்போது அவரின் முதுகில் பாக்குப் பாறைகளை கொட்டி, சிறிது சீவல் குப்பைகளையும் அள்ளித்தெளித்து அமுக்கினாள். வெற்றிலையார் கதறக் கதற அவரது உடலை இரண்டு, நான்கு, எட்டு மடிப்புகளாக மடித்து தனது பல்செட்டின் கடைவாய்ப்பகுதியில் வைத்து கடித்துக் குதறி கொன்றாள். சத்தத்தின் டெசிபல் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் வெற்றிலையாரின் மரண ஓலம் அவளது வாய்க்குள்ளேயே அடங்கிப்போனது.

வெற்றிலையாரின் செங்குருதி மட்டும் அவளது கடைவாய் வழியாக வழிந்து தரையை நனைத்துக்கொண்டிருந்தது.

கோமதி பாட்டியும் அபிராமி கிழவியும் இணைபிரியா உடன்பிறந்த சகோதரிகள்.

'பளபள' வென இருக்கும் பல்செட்டை மாட்டிக்கொண்டு 'கொழகொழ' வென வாயில் வெற்றிலைபாக்கு மென்றுகொண்டு 'வழவழ' வென எப்போதும் பேசிக்கொண்டு காலம் தள்ளும் இந்த இரட்டைக்கிழவிகளை ஒருபோதும் பிரிந்து பார்க்கவே முடியாது.

ஆனால் காலம் அவர்களை இப்போது பிரிய வைத்துவிட்டது.

அதாகப்பட்டது, கோமதிப்பாட்டி காசியாத்திரை போவதென்று முடிவெடுத்து விட்டாள்.

அவள் காசியாத்திரை போவதற்கு காரணம் புண்ணியம் தேடி அல்ல. தனது தொல்லை தாங்காமல் இருபது வருடத்திற்கு முன் வீட்டை விட்டு ஓடிப்போன தனது கணவன் புண்ணியகோடியைத் தேடி.

(அறுபது வருடங்களுக்கு முன்.......(ஃப்ளாஷ்பேக்))

கோமதிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள்.

'அம்மா. எனக்கு நீங்க யாரும் மாப்பிள்ளை பார்க்க வேணாம். எனக்கு நானே பார்த்துக்கிறேன்.'

'ஏண்டி இப்படி சொல்லுற?'

'அம்மா. நான் ஒரு லட்சியத்தோட இருக்கேன். எனக்கு கோடீஸ்வரன் மாப்பிள்ளை வேண்டாம். ஒரு அன்னாடம் காய்ச்சியை கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிறதுதான் என்னோட வாழ்க்கையின் லட்சியம்.'

அம்மா கடுப்பாகி 'எக்கேடோ கெட்டுத்தொலை' என்று திட்டிவிட்டு அடுப்பங்கரைக்குச் சென்றுவிட்டாள்.

கோமதி தனது சகோதரி அபிராமியை உடன் அழைத்துக்கொண்டு தனது 'லட்சியப்புருசனை' தேடி தெருத்தெருவாக அலைந்து திரிந்தாள்.

ஒருநாள் தனது லட்சியப்புருசனை தெருக்கோடியில் கண்டெடுத்தாள்.

சிக்குப்பிடித்த தலையுடனும் வயிறு வரை தாடியுடனும் 'ஙங ஙங' என்று தலையை சொறிந்தபடி ஒருவன் தெருக்கோடியின் பிளாட்பாரத்தில் உருண்டு கிடந்தான்.

அவனை நெருங்கிய கோமதி அவனை எழுப்பிவிட்டாள்.

'என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?'

'கல்யாணம் பண்ணிகிட்டா தினமும் எனக்கு சோறு போடுவீங்களா' என்று அவன் திருப்பிக்கேட்டான்.

'கண்டிப்பா போடுவேன் அத்தான்' என்றாள் கோமதி.

ஒரு குண்டான் பழைய சோற்றினை ஒரே வாயில் தின்றதுபோல் அவன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தான்.


திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்ததும் முதல் வேளையாக அவனது கெட்டப்பை மாற்ற விரும்பினாள் கோமதி.

தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் துருப்பிடித்துக்கிடந்த புல்வெட்டும் கத்தரிக்கோலை கொண்டுவந்து, புண்ணியகோடியை உட்கார வைத்து அவனது தலையில் வளர்ந்திருந்த அடர்ந்த புதரினை வெட்ட ஆரம்பித்தாள்.

அந்நேரம் அவனது தலையில் 'பேன்கள் மாநாடு' நடந்துகொண்டிருந்தது. மேடையில் பேன்களின் தலைவர் பேசிக்கொண்டிருக்க ஆயிரக்கணக்கான பேன்கள் மேடைமுன்பு அமர்ந்து அவரது பேச்சினைக் கேட்டு கைதட்டி ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர்.

'நண்பர்களே! இந்த மனிதப்பயல்கள்தான் தலையில் அழுக்கினை ஸ்டாக் வைத்து நமது இனத்தினை உருவாக்குகிறார்கள். பின்னர் ஏன் நாம் வளர்ந்த பிறகு சீயக்காய்,ஷாம்பு போன்றவற்றினை தடவிக்குளித்து நம் இனத்தினை அழிக்கின்றனர்?

இவ்வளவு தீங்குகள் செய்தாலும் நாம் அவர்களுக்கு நன்மைகள்தானே செய்கிறோம். அதாவது அவர்கள் அடிக்கடி அயர்ந்து தூங்கி பொழுதினைப்போக்கி சோம்பேறிகளாக மாறிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் நாம் அவர்களது மண்டையினை கடித்துக்குதறி அவர்களை தூங்கவிடாமல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறோம்.இதுகூட புரிய வில்லையா இந்த மரமண்டைகளுக்கு?. ஆனால் நாம் குடியிருக்கும் இந்த தலைக்குச் சொந்தக்காரன் புண்ணியகோடி மிகவும் நல்லவன். இதுவரை பல வருடங்களாக தனது தலையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட படாமல் நம்மை பாதுகாக்கிறான்.எனவே புண்ணியகோடி வாழ்க! வாழ்க! சீயக்காய், ஷாம்பு ஒழிக! ஒழிக!' என கோஷமிட்டார்.


திடீரென ஓர் ஆயுதம் தனது இருப்பிடத்தினை தாக்கி அழிப்பதனை கண்ட பேன்கள் கூட்டம், அலறியடித்தபடி சிதறியோடினர்.

'ஆ! ஆபத்து! இவ்வளவு காலம் நமது இனத்தினை பாதுகாத்து வந்த புண்ணியகோடியா இப்படி செய்வது?'

'தலைவா! இது புண்ணியகோடியின் செயல் அல்ல. அவனது புதுப்பெண்டாட்டி கோமதியின் சதிச்செயல்'

'ஆ! அப்படியா! ஒற்றர்படை வீரனே! உடனே நீ ஓடோடிச்சென்று அந்த கோமதியின் தலையில் வாழும் நமது இனத்தவரிடம் சென்று அவள் தலைமீது தாக்குதல் நடத்துவதற்கு கட்டளையிட்டுவிட்டு வா!'

ஒற்றர்படை வீரன் வேகவேகமாக ஓடோடிச்சென்று கத்தரிக்கோல் வழியாக கோமதியின் கையில் ஏறி பாஸ்போர்ட், வீசா எதுவுமின்றி அண்டை நாடான கோமதியின் மண்டையினை வந்தடைந்தான்.

அங்கு அசதியில் தூங்கிக்கொண்டிருந்த பேன்கள் கூட்டத்தினை எழுப்பி நடந்ததை விளக்கினான்.

கோபமடைந்த பேன்கள் கூட்டம் தங்களது ஆயதங்களாகிய வாயினால் கோமதியின் உச்சந்தலையில் கடித்துக்குதறி ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தினர்.

அரிப்பு தாங்கமுடியாமல் கோமதி புண்ணியகோடியின் புதர் மண்டிய தலையினை சீர்திருத்தும் பணியினை கைவிட்டுவிட்டு தனது இரண்டு கைகளினாலும் தனது உச்சந்தலையினை 'வரட் சரட்' டென்று சொறிய ஆரம்பித்தாள்.

பின்னர், பாசமிகுதியினால் தனது கணவனுக்கு எப்போதும் சுடச்சுட பூரி, இட்லி,தோசை, பிரியாணி வகைகளை சமைத்துப்போட்டாலும் அவை எதுவுமே அவனுக்கு பிடிக்காமல் போனது. குண்டான் நிறைய பழையசோறு சாப்பிட வேண்டும் என்று ஒருநாள் அடம்பிடித்தான் புண்ணியகோடி.

கோபமடைந்த கோமதி அவனை தரதரவென இழுத்துப்போட்டு தூக்கிப்போட்டு மிதித்து சுளுக்கெடுத்தாள்.

வலி தாங்கமுடியாமலும் பழையசோறு திங்கவேண்டும் என்ற தனது நீண்டநாள் ஆசையினை நிறைவேற்றிக்கொள்ளவும் ஒருநாள் வீட்டை விட்டு ஓடிப்போனான் புண்ணியகோடி.

(ஃப்ளாஷ்பேக் முடிந்தது.)


பல்செட் மாட்டிக்கொண்டு, சீடையினை தின்றுகொண்டு கோமதி கிழவி தொலைக்காட்சியினை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்போது 'நான் கடவுள்' படத்தின் பாடல் காட்சி ஒன்று ஒளிபரப்பானது.

அதில் காசியில், கங்கையாற்றின் படித்துறையில் கதாநாயகன் ஆர்யா ஒரு சாமியாரை தூக்கிப்போட்டு மிதித்து பிறகு பறந்துபோய் அவனது தொந்தியின் மேல் 'நங்' கென்று சம்மணமிட்டு அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார்.

கீழே கிடந்த அந்த சாமியார் அச்சு அசல் புண்ணியகோடி போல இருந்தான்.

மகிழ்ச்சியில் திளைத்தாள் கோமதி பாட்டி.

'அடியேய் அபிராமி! உன்னோட அத்தான், அதான் என்னோட கணவர் காசியிலதாண்டி இருக்கிறாரு. அவரை எப்படியாவது கண்டுபிடிச்சி பழையசோறு கொடுத்து சமாதானம் பண்ணி ஊருக்கு கூட்டிகிட்டுவந்துடறேன். நீ வீட்டை பத்திரமா பார்த்துக்க. நான் போய்ட்டு வர்றேன்.'

என்று மறக்காமல் ஒரு தூக்குச்சட்டி நிறைய பழையசோற்றினை அள்ளி அமுக்கிக்கொண்டு தனது கணவனைத்தேடி காசிக்குப் புறப்பட்டாள் கோமதி பாட்டி.


Urik in Gomti copputtannir grandmother who took her palcettai ensnared in the mouth. betel box ah மல்லாக்கப்படுத்து inside his palms down on the bed and placed the sleeping komatipatti verrilaiyarai. kanvilittup looked slightly disheveled verrilaiyar sleep. Gomati scanner backs of verrilaiyar affectionate grandmother, has wiped the dust attached to the top. Affectionate varutiyat the layittuppona verrilaiyar again overwhelmed sleep began. then lime Duffy from his index finger slightly cunnampinai take the verrilaiyar backs widely tatavivittal. lime was angered shocked sleep dispersed verrilaiyar cutarippatarkul komatipatti his stem tail with his finger cut threw. He has pain in the back while trying to get up in the alarittutitta verrilaiyar pakkup poured rocks, a little slice allittelittu suppress garbage. His body is screaming katarak verrilaiyar two, four, eight folds of the pleated kataivayppakuti put his palcet kutari killing bite. Noise decibel level was so low was verrilaiyar death agony of her vaykkulleye atankipponatu. verrilaiyar's cenkuruti only her kataivay via the overflows floor நனைத்துக்கொண்டிருந்தது. Gomati grandmother Apirami old inseparable siblings sisters. 'palapala' vena the palcettai caught 'kolakola' vena gate verrilaipa the menrukontu 'valavala' vena ever This can be seen pushing time talking irattaikkilavikalai never separated., but time has made ​​them to leave now. atakappattatu, komatippatti kaciyattirai decided not to go. kaciyattirai go because she is not looking good fortune. Shocked by his troublesome twenty years ago fled the house in search of her husband punniyakotiyait.(sixty years ago ....... (flashback)) Gomati began to see the groom in the house. 'mother.You do not want anyone to see my son. I take care of myself. ' "enti this mean? ' "mother. I am a latciyattota. I do not groom millionaire. A annatam distilled married பண்ணிக்கணும்ங்கிறதுதான் my life's ambition. ' mother katuppaki 'ekketo kettuttolai he shouted அடுப்பங்கரைக்குச் past. Gomati his sister Abhirami with calling her 'latciyappurucanai' search terutteru wandered. someday his latciyappurucanai terukkoti found on. cikkuppititta talaiyutanum stomach until tatiyutanum 'nana nana "The head corintapati one terukkoti the platform rolls lying. him close Gomati he has created. 'me marry pannikkirinkala?' "marriage pannikitta everyday I cook potuvinkala" he திருப்பிக்கேட்டான்."Sure I'll cousin, 'said Gomti. , a gangster old corrinai same gate tinratupe he துள்ளிக்குதித்தான் in joy. marriage. marriage after the first time and wanted to change his bad Gomati. துருப்பிடித்துக்கிடந்த lawn in the backyard of his home and brought kattarikkolai, punniyakotiyai sit up and developed in his head and began to cut thick putarinai. busy in his head "lice Conference 'happening. Thousands of head lice lice metaimunpu sat talking on the platform listening to his speech were cheered with applause.'guys! Keep this மனிதப்பயல்கள்தான் head stack alukkinai make our ethnicity. Why then, after we developed soapnut, shampoo etc. tatavikkulittu destroying our ethnicity?nanmaikaltane so much harm we are doing to them. This means that they often become overwhelmed and lazy sleeping பொழுதினைப்போக்கி their mantaiyinai katittukkutari in good faith, we do not understand them வைக்கிறோம்.இதுகூட tunkavitamal always run active for the maramantaikal ?. But we have been drinking this talaikkuc punniyakoti owner is very nice. For far too many years without even a drop of water on his head punniyakoti பாதுகாக்கிறான்.எனவே us life! Hail! Soapnut, shampoo Down! Down! ' The crowd chanted.suddenly struck by a weapon from cutting its location, the lice meeting, alariyatittapati scattering. 'Ah! Danger! Punniyakotiya protecting our ethnicity do this for so long? ' "Boss!It's not punniyakoti. Conspiracy of his putuppentatti Gomti ' 'Ah! Really! Orrarpatai virane!Immediately pledges the Gomati's head, living in our community, who went to her head and attack கட்டளையிட்டுவிட்டு come! ' orrarpatai champ rapid pledges scissors along the Gomati's hand climbed the passport, visa, without the neighboring Gomati's mantaiyinai arrived. , where tired and sleeping in his lice session riser explained what had. angered lice meeting their ayatankalakiya mouth Gomati's scalp katittukkutari rage attacked. itching unbearable Gomati punniyakoti of bushy, the head of reforming the process, abandoning his two hands on his scalp, "Let's string 'tenru scratch started. later, pacamikutiyin her husband always hot puri, idli, dosa, biryani dishes சமைத்துப்போட்டாலும் None of them I hate him.One would have to eat a lot of thugs demanding punniyakoti palaiyacoru. angered him Gomati tarataravena iluttuppottu tukkippottu culukketuttal trampled. painful tankamutiyamalum his longtime desire to fulfill one of palaiyacoru tinkaventum punniyakoti ran away from home. (flashback ended.) palcet coat, citaiyinai tinrukontu Gomati old woman watching television. then 'I am God' song being aired. including Kashi, Ganga Ghat of the hero Arya a Saamiya tukkippottu trampled and then parantupoy his tonti the top of the 'Da' kenru cammanamittu seated meditation began. Below lay the priest original print punniyakoti was like. joy exuded Gomati grandmother . 'atiyey Apirami! Your cousin, my husband kaciyilatanti irukkiraru adhan. Kantupiticci somehow made ​​peace with him palaiyacoru கூட்டிகிட்டுவந்துடறேன் to town. You have to take care of the house properly.I Goodbye. " Remember that a lot of tukkuccatti palaiyacorrinai amukkikkontu bestowed his kanavanaitteti kacikkup Gomati grandmother was going. ...


...