Wednesday, August 26, 2015

Access Linux from Windows - விண்டோஸ் கணினியிலிருந்து லினக்ஸ் கணினியை இயக்க...



ஒரு நிறுவனத்தில் ஒரே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள அனைத்துக் கணினிகளிலும் விண்டோஸ் இயங்குதளம் உள்ளது.

அத்தனைக் கணினிகளிலும் லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படுகிறது எனில்....

அனைத்துக் கணினிகளிலும் லினக்ஸ் இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை.

ஏதாவது ஒரு கணினியில் லினக்ஸ் இன்ஸ்டால் செய்து அந்த கணினியை மற்ற அனைத்து விண்டோஸ் கணினிகளும் இயக்க முடியும்.

முதலில் ஏதாவது ஒரு கணினியில் லினக்ஸ் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

பிறகு அந்த லினக்ஸ் கணினிக்கு  அந்த நெட்வொர்க்கில் இணையும்படி  ஒரு IP Address கொடுக்க வேண்டும்.

உதாரணமாக:  192.168.1.123

பின்னர் PuTTY.exe என்ற  ஒரு Software -    கீழ்க்கண்ட  இணையதளத்திலிருந்து  Download செய்து அதை  மற்ற அனைத்து விண்டோஸ் கணினிகளிலும் நிறுவ வேண்டும்.


இப்போது விண்டோஸ் கணினியில் PuTTY.exe  - திறந்து லினக்ஸ் இன்ஸ்டால் செய்த கணினியின்  IP Address கொடுக்க வேண்டும்.

பின்னர்  PuTTY.exe - ல் லினக்ஸ் கணினியின் UserName மற்றும்  Password உள்ளீடு செய்தால்...

விண்டோஸ் கணினியிலிருந்து லினக்ஸ் கணினியை இயக்க முடியும்.

இதே முறையில் ஒரேயொரு லினக்ஸ் கணினியை மற்ற எல்லா விண்டோஸ் கணினிகளும் ஒரே நேரத்தில் இயக்கலாம்.

......

No comments:

Post a Comment