Saturday, October 11, 2014

How To Block a Website -ஒரு இணையதளத்தை முடக்குவது எப்படி?



அதாவது,

 அலுவலகத்தில் உள்ள கணிப்பொறியில் பணிபுரிபவர்கள் தொடர்ந்து facebook.com , twitter.com , youtube.com  போன்ற இணையதளங்களை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.


எனவே அதுபோன்ற குறிப்பிட்ட சில இணையதளங்கள் மட்டும் அந்த கணிப்பொறியில்  Open ஆகாமல் செய்ய முடியும்.

எப்படி?

உதாரணமாக facebook.com  இணையதளத்தினை வராமல் தடுக்க:

C:\WINDOWS\system32\drivers\etc

என்ற Folder  - ல் hosts என்ற ஒரு  File இருக்கும்.

அதை Right Click செய்து  Notepad -  ல்  Open செய்யவும்.


அந்த File ன் கடைசியில் கீழ்க்கண்டவாறு டைப் செய்யவும்:

0.0.0.0   www.facebook.com


பின்னர் File - Save செய்து மூடி விடவும்.

இப்போது facebook.com இணையதளம் அந்த கணிப்பொறியில் Connect ஆகாது.

இதில் 0.0.0.0 என்பது ஒரு IP Address ஆகும்.

இது போலவே  நாம் தடுக்க வேண்டிய இணையதளங்களின் முழுப்பெயரை (Domain Name) மேற்கண்ட மாதிரி hosts file - ல் அடுத்தடுத்த வரிகளில் கொடுத்து  Connect ஆகாமல் முடக்க முடியும்.



1.  hosts  என்பது என்ன?  எதற்கு ?   எப்படி செயல்படுகிறது?

அதைப் பற்றி    தெரிந்து கொள்ள...

http://

செல்லவும்!          



2. ஒரு கணிப்பொறியில்  எந்தவகையில் ஒரு குறிப்பிட்ட இணையதளம் முடக்கப்பட்டாலும் அந்த கணிப்பொறியில் அந்த இணையதளத்தினை பார்க்க முடியும். அது எப்படி? அதற்கும் வழி இருக்கிறது.

             அதைப் பற்றி    தெரிந்து கொள்ள...

http://manimozhigal.blogspot.in/2014/10/how-to-unblock-banned-websites.html

செல்லவும்!
......



No comments:

Post a Comment