Thursday, September 25, 2014

ஓர் இணையதளம் எந்த IP முகவரியிலிருந்து இயங்குகிறது?



ஓர் இணையதளம் எந்த IP  முகவரியிலிருந்து (IP Address) இயங்குகிறது  என தெரிந்து கொள்ள வேண்டுமா?

Command Mode சென்று  ping என டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, IP  Address தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளத்தின் முழுப்பெயரை (Domain Name) டைப் செய்து Enter கொடுக்கவும்.

உதாரணமாக,

ping    www.google.com


என டைப் செய்து Enter கொடுத்தால் google.com  ன்  IP முகவரியை (IP Address) நாம் அறிந்து கொள்ள முடியும்!






ஒரு இணையதளத்தின் IP Address ஆனது அந்த இணையதளம்  Hosting செய்யப்பட்டிருக்கும் Web Server - ன் Public IP Address ஆகும்.

 ( Pubic IP Address என்றால் என்ன என்பதை அறிய முந்தைய பதிவினை  படிக்கவும்.)

google போன்ற பிரபலமான இணையதளங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட Web Server - களிலிருந்து இயங்குகின்றன.

 அது போன்ற இணையதளங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட  IP Addresses - உண்டு.

எனவே ஒரு இணையதளத்தின் அனைத்து IP Address - களும் தெரிந்து கொள்ள:

Command Mode - சென்று,

nslookup


 என டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு   இணையதளத்தின் பெயரை (Domain Name) கொடுத்து என்டர் செய்தால் அந்த இணையதளம் இயங்கும் அனைத்து Webserver -களின் IP Address - களும் பார்க்க முடியும்.

உதாரணமாக:

nslookup    google.com

அல்லது

nslookup www.google.com





ஓர் இணையதளத்தின்  IP முகவரியை நாம் நேரடியாக பிரவுசரின் 
Address Bar - ல் Type செய்தாலும் அந்த முகவரிக்குரிய இணையதளம்  Connect ஆகும்.


உதாரணமாக Browser ல்  www.google.com ன் IP முகவரிகளில் ஒன்றான 74.125.236.209 -ஐ நாம் நேரடியாக டைப் செய்து Enter கொடுத்தால் www.google.com  இணையதளம் Open ஆகும்.





  



ஆனால் எல்லா இணையதளங்களையும் நாம்  மேற்கண்டவாறு IP முகவரி கொடுத்து  Connect செய்ய முடியாது.

ஏன்?

 அதனை வேறு ஒரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

....

No comments:

Post a Comment