Saturday, January 23, 2010

அழைப்பிற்கு நன்றி!

நேற்று மாலை 5.30 க்கு ஜாக்கிசேகர் கிட்டேயிருந்து போன் வந்தது.

எடுத்தவுடனே 'நன்றி மணிப்பயல்' ன்னு சொன்னார். எதுக்கு நன்றி தெரிவிக்கிறார்னு தெரியாம திருதிருன்னு முழிச்சேன்.

'உங்க வலைப்பக்கத்திலே என்னோட வலைப்பதிவை விளம்பரப்படுத்தினதுக்கு.' ன்னு சொன்னார்.

'நான் இப்பத்தான் உங்க வலைப்பக்கம் படிச்சுப்பார்த்தேன். நல்லா எழுதியிருக்கீங்க. நேரம் கிடைச்சா பின்னூட்டம் போடறேன்.' ன்னு பாராட்டினார்.

300 க்கும் மேற்பட்டவர்கள் வலைப்பதிவை பின்தொடரும் அளவுக்கு எழுத்துலகிலும், சினிமாத்துறையில் ஒளிப்பதிவாளராகவும் வெற்றிக்கொடி கட்டிப் பறக்கும் அவர் இந்த பொடியனுக்கு போன் பண்ணி பேசினது எனக்குப் பெருமை.


முதல்ல எனக்கு சொந்தமா இப்படி ஒரு வலைப்பக்கம் வெச்சிருக்கிறதைப் பத்தி நான் என்னோட நெருக்கமான நண்பர்கள் கிட்ட கூட சொன்னது கிடையாது. அவ்ளோ வெட்கப்படுவேன்.(நிஜமாதாங்க).

அப்புறம் வித்யா மற்றும் பதிவுலக முகம் தெரியா நண்பர்கள் சிலபேர் 'உங்க பதிவுகள் நல்லாயிருக்கு' ன்னு பாராட்டினதும் எனக்கு தன்னம்பிக்கை வந்துடுச்சு.

நான் எழுதின பதிவுகளை நான் மட்டுமே திரும்ப திரும்ப படிச்சு HITS கணக்கை அதிகப்படுத்த படாதபாடுபட்ட அந்த கொடுமையான நாட்களில், என்னுடைய வலைப்பதிவுகளை படிச்சு இணைய உலகத்திற்கு அறிமுகப்படுத்தி, நாலு பேருக்கு இந்த மணிப்பயலை தெரிய வெச்ச வித்யாவுக்கு கோடானுகோடி நன்றி.

என்னோட நண்பன் பார்த்திபனோட அருமை பெருமைகளைப்பத்தி 'பார்த்திபன் கனவு' ங்கற கவிதையாகவும்,

என்னோட தோழி கோமதியும் அவரோட தங்கை அபிராமியும் தன்னைப்பத்தி பெருமையா ஒரு கதை எழுதச்சொல்லி கேட்டுகிட்டதால 'கோமதி பாட்டியின் காசி யாத்திரை' ங்கற தலைப்புல ஒரு கதையும் எழுதி நண்பர்களோட பாராட்டுகளுக்கு ஆளானேன். (கோமதி நறநறன்னு பற்களை கடிக்கிறது என் காதில விழுது.)

அப்புறம் எங்க ஊரு காமெடி பீஸ் போனாகானா வை கதைநாயகனா வெச்சு எழுதின 'போனாகானா முதலியாரின் தேசபக்தி' மிகுந்த வரவேற்பைப் பெற்றது. (இது மட்டும் அந்த ஆளுக்கு தெரிஞ்சா கண்டிப்பா என்மேல கேஸ் போட்டுடுவாரு.)

அப்புறம் நானும் என் நண்பன் குண்டுசவுரியும் பள்ளிவயதில் பண்ணின குறும்புகளை வெச்சு சில கதைகள் எழுதினேன்.

தொந்தியின் பயன்களைப் பத்தி நீண்ட நாட்களா ஆராய்ச்சி பண்ணி ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிச்சேன்.வாழ்க்கையில் வழுக்கி விழுவோம்

தொந்தியின் பயன்கள்

சாமி குத்தம்

ஆகிய சில படைப்புகள் விகடனில் வந்தது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது.


இன்னும் நிறைய தினமும் எழுதணும்னு ஆசையா இருந்தாலும், அன்றாட மனித வாழ்வின் நெருக்கடிகளால் என்னோட கற்பனைக் குதிரை கவுந்தடிச்சி படுத்திடுது.

அதனால எப்பவாவது நிம்மதியான பொழுதுகளில் மட்டும் என்னோட வலைப்பக்கத்துல கொஞ்சம் உளறிக்கொட்டுவேன். மத்தபடி எழுத்துலகில் சாதிக்கும் அளவுக்கு நேரமும் தகுதியும் எனக்கு மிகவும் குறைவு.

ஆனாலும் ஜாக்கிசேகர் மாதிரி என்னை உற்சாகப்படுத்தும் நல்ல மனிதர்களுக்காக நானும் இன்னும் நிறைய எழுத முயற்சி பண்ணுவேன்.

நன்றி ஜாக்கிசேகர் சார்.


...