Monday, November 16, 2009

இன்றைய செய்திகள் (16-12-2009)

செய்தி 1:

நிஜம்:

வாரிசு அரசியலை காங்கிரஸ் எதிர்க்கும் என இ.வி.கே.எஸ் இளங்கோவன் விழா ஒன்றில் பேசும்போது தெரிவித்தார்.

நிழல் :

இப்படி கூறியதன் மூலம் காங்கிரஸை நிரந்தர குத்தகைக்கு எடுத்திருக்கும் நேரு குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் வேதனை தெரிவித்தனர்.

செய்தி 2:

நிஜம்:

சாதி வாரியான கணப்பெடுப்பு உடனே நடத்த வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாசு தெரிவித்தார்.

நிழல் :

மேலும், அரசு நடத்தும் கட்டணக் கழிவறைகளின் முன்னால் வரிசையில் நிற்பவர்களில் கூட தனது சாதியினருக்கு முன்னுரிமை அளித்து உள்ளே அனுமதிக்கவேண்டுமென வலியுறுத்தினார்.



செய்தி 3:

நிஜம் :

இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய நிதியமைச்சர் இலங்கையில் சந்தித்துப் பேசினார்.

நிழல் :

அப்போது,போரில் இலங்கைக்கு இந்தியா மிகப்பெரும் உதவிகள் செய்தும் தமிழர்கள் இன்னும் சிலரை மிச்சம் மீதி விட்டு வைத்திருப்பதற்கு தனது அதிருப்தியை தெரிவித்தார்.

செய்தி 4:

நிஜம் :

தர்மபுரி "கியூ' பிராஞ்ச் அலுவலகத்தில் நேற்று அதிகாலை, போலீசார் தங்களுடைய டாடா சுமோ வாகனங்களுக்கு, ஆட்டு கிடா வெட்டி திருஷ்டி பூஜை செய்தனர்.



நிழல் :

மேலும் 'மாமூல்' வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்க அப்பாவிப் பலியாடுகள் பெருமளவில் சிக்குவதற்கு ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டனர்.

செய்தி 5:

நிஜம் :


புத்தமதத் தலைவர் தலாய்லாமா அருணாச்சல பிரதேசத்தில் தனது ஒருவார பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று டில்லி திரும்பினார்.


நிழல் :

தனது பயணத்தின் மூலம் இந்தியா, சீனா இடையே சிண்டுமுடிந்திடும் வேலை மிகச்சுலபமாக முடிந்ததாக பெருமிதத்துடன் தெரிவித்தார்

செய்தி 6:

நிஜம் :

தி.மு.க.வும், காங்கிரசும் இரண்டற கலந்து லட்சிய நோக்கத்தோடு செயல்படும் கட்சிகள். இரு கட்சிகளும் கூட்டாக இருந்தால் தமிழ்நாடு மட்டுமல்ல. இந்தியாவே வளமாகவும், வலிமையாகவும் இருக்கும் : கருணாநிதி பேச்சு.


நிழல் :

ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருகட்சிகளும் கூட்டாக செயல்பட்டதன் மூலம் தங்களது லட்சிய நோக்கத்தினை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

...

2 comments:

  1. நிஜம் வெர்சஸ் நிழல் ..... அருமை அண்ணே ...

    ReplyDelete
  2. 1. மணி, எங்க ஊர்ல(அமெரிக்கா) இளவரளிப்பூ(pink) வண்ணம்னா அது பெண்களுக்கானது.

    2. அடுத்து உங்க கும்பிடு, அபாரம்... பார்த்து ஆடிப் போயிட்டேன்!!

    ReplyDelete