Tuesday, June 30, 2009

இன்றைய செய்திகள் (30-06-2009)

செய்தி 1:

நிழல் :

பறவைகளின் மேல் அன்பும் பாசமும் கொண்ட உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி அவர்கள் பறவைகள் பயன்படுத்துவதற்காக 1000 கோடி ருபாய் செலவில் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே டாய்லெட் வசதி செய்து கொடுத்துள்ளார்.

நிஜம் :

அதாவது, உ.பி முதல்வர் மாயாவதி 1000 கோடி ருபாய் அரசுப்பணத்தில் மாநிலம் முழுவதும் தனது சிலைகளை நிறுவி பறவைகளின் 'பயன்'பாட்டிற்காக அவற்றைத் திறந்து வைத்தார்.



செய்தி 2:

நிஜம் :

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி நடந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட லிபரான் கமிசன், விசாரணை அறிக்கையை இன்று (30-06-2009) தாக்கல் செய்தது. 48 முறை கமிசன் தனது விசாரணை காலத்தை நீட்டித்து, 17 வருடங்களுக்குப்பிறகு அறிக்கையை இன்று சமர்ப்பித்துள்ளது.

நிழல் :

அதைத்தொடர்ந்து, இன்னும் 170 ஆண்டுகளுக்குள் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் உயிருடனோ பிணமாகவோ ஆவியாகவோ நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.



செய்தி 3:

நிஜம் :

தமிழ் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கை அதிருப்தி தருவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

நிழல் :

தான் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அரசு விமானங்களிலும் போர்க் கப்பலிலும் போர் நடந்த சமயத்தில் அனுப்பிய ஏராளமான நிவாரண 'பொருட்களை' இலங்கை ராணுவம் சரிவர பயன்படுத்தாததாலேயே மீதம் இத்தனை லட்சம் தமிழர்கள் தப்பிப் பிழைத்து விட்டதாகவும், இந்தியாவினால் கொடுக்கப்பட்ட பயிற்சிகளை அந்நாட்டு ராணுவ வீரர்கள் சரியாக பயன்படுத்தியிருந்தால் தற்போது அகதிகள் என்று யாரும் இருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

அதே நேரத்தில், தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படை தொடர்ந்து கொடுத்துவரும் 'விருந்து உபசாரங்களுக்காக' அந்நாட்டு அதிபர் ராசபக்சேவுக்கு தான் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.



செய்தி 4:

நிஜம் :

சென்னை மாநகராட்சியிலுள்ள தி.மு.க கவுன்சிலர்கள் இனிமேல் கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டால் மாநகராட்சி மன்றத்தையே கலைத்துவிடுவேன் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.

நிழல் :

அல்லது, தவறு செய்யும் தி.மு.க கவுன்சிலர்களின் பதவிகளைப் பறித்து அந்தப்பதவிகளை தனது பேரன் பேத்திகள் மற்றும் கொள்ளு பேரன்களுக்கு கொடுப்பதற்கான சட்டம் ஒன்றினை இயற்ற முடிவெடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.



செய்தி 5:

நிஜம்:

தீவிரவாதிகளுடன் இனி பேச்சு வார்த்தை நடத்தப்போவதில்லை என பாகிஸ்தான் பிரதமர் கிலானி தெரிவித்தார்.

நிழல் :

இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கும் பணியினை தீவிரவாதிகள் சரிவர மேற்கொள்ளவில்லை எனவும் அதன் காரணமாகவே அவர்கள் மீது தான் அதிருப்தி அடைந்ததாகவும் அவர் தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டினார்.


.

2 comments:

  1. மாயாவதி பற்றிய செய்தி அருமை:)

    ReplyDelete
  2. அருமையான எழுத்து நடை!
    தெடர்ந்து படிக்கிறேன்...
    நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete