Wednesday, June 24, 2009

32 கேள்விகள்

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என்னோட பேரு மணிகண்டனுங்க. நேரா பாக்குறப்ப மணிசார் மணிசார்னு மரியாதையா கூப்புடுவாங்க. கொஞ்சம் அப்படி இப்படி நவுந்து போனா 'இந்த மணிப்பய இருக்கானே...அவன்...' ன்னு பேச ஆரம்பிச்சிடுவாங்க. எதுக்கு வம்புன்னு எனக்கு நானே மணிப்பயல்னு பேர மாத்தி வெச்சிகிட்டேன்.புடிக்கலன்னா என்ன பண்ண போறீங்க? ஆளுக்கு ஒரு பட்டப்பேரு வெச்சி கூப்பிடுவீங்க. எதுக்குங்க வம்பு?


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

பக்கத்து வீட்டுத் தாத்தா செத்துப்போனப்ப கிழவியைக் கட்டிப்புடிச்சி கிட்டு அழுதேன். (அழுதாத்தான் திங்கறதுக்கு பலகாரம் கொடுப்பாங்களாம்ல?). கருமம் அந்த தேதியெல்லாமா ஞாபகம் வெச்சுக்க முடியும்?


3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும். ஆனா என்ன எழுதினேன்னு எழுதினதுக்கப்புறம் எனக்கே புரியாது.


4.பிடித்த மதிய உணவு என்ன?

ஓசியில் கிடைத்தால் பிரியாணி. காசுக்கு சாப்பிட்டால் தயிர்சாதம்.


5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

இந்தக்கேள்விக்கு உண்மையைச்சொன்னா அப்புறம் யாராவது என்னோட நட்பு வெச்சுக்குவாங்களா?


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

முதல்ல குளிக்கப் பிடிச்சாத்தானே அப்புறம் இந்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியும்?.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முன்னப் பின்ன அறிமுகம் இல்லாத ஆளை எதுக்குங்க கவனிக்கனும்?


8.உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

அது தெரிஞ்சிருந்தாதான் வாழ்க்கையில இந்நேரம் நான் உருப்பட்டு இருப்பேனே.


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?


எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்க. இப்போதைக்கு என்னோட சரிபாதி என்னோட ஆடைகள்தான்( ஏன்னா ஆள் பாதி. ஆடை பாதி இல்லையா?)

துவைச்சி இருந்தா போட்டுக்க பிடிக்கும்.
அழுக்கான அப்புறம் துவைக்கப்பிடிக்காது.


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

சொல்ல மாட்டேன். எனக்கு வெக்கம் வெக்கமா வருது.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

புதுசா வாங்குனப்ப வெள்ளைக் கலர்ல இருந்தது. இப்ப என்ன கலர்ல இருக்குன்னு தெரியலையே.(சட்டையை துவைச்சாதான் ஒரிஜினல் கலர் தெரியும் னு சொல்றாங்களே.அப்படியா?)


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?


பக்கத்து வீட்டுக் கிழவி நாராசமாப் பாடிக்கிட்டு இருக்கிற பழைய 'காத்தவராயன்' சினிமாப்பாட்டு.


13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

அது எழுதப்போற பேப்பரோட நிறத்தைப் பொறுத்தது.


14.பிடித்த மணம்?

சம்மணம்.(சும்மா குந்தி கிடக்கத்தாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்).


15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

என்கிட்ட கடன் வாங்கிட்டு குடுக்காம டிமிக்கி குடுத்துகிட்டு இருக்கிற எல்லாப்பயலுங்களையும் அழைக்கப்போறேன். அழைக்கக்காரணமா? தூக்கிப்போட்டு மிதிக்கிறதுக்குத்தான். அவனுங்களை எனக்குப் பிடிக்குதோ இல்லையோ.நான்தான் அவனுங்களை துரத்தி துரத்தி பிடிக்கணும்.


16.பிடித்த விளையாட்டு?

தூங்குற விளையாட்டு

17.கண்ணாடி அணிபவரா?

பைக் ல போறப்ப மட்டும் கருப்பு கண்ணாடி அணிவேன்.


18.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

எனக்குப்பிடிச்சது டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் படங்கள் மட்டும்தான்.


19.கடைசியாகப் பார்த்த படம்?

பர்ஸ்ல இருக்கிற என்னோட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.


20.பிடித்த பருவ காலம் எது?

கோடைக்காலத்துல குளிர்காலம் பிடிக்கும். குளிர்காலத்துல கோடைக்காலம் பிடிக்கும்.


21.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

நான் கொட்டாவி விடுறதுக்தே அலுப்பு படுவேன். படத்தை மாற்றினதே இல்லை. ரொம்ப அலுப்பா இருக்குங்க.

22.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் – இட்லி குக்கர் சத்தம்.
பிடிக்காத சத்தம் – 'இட்லி தீர்ந்துப்போச்சுடா' என்கிற அம்மாவின் சத்தம்.

23.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

கல்லூரியில படிக்கிறப்ப டெல்லி போய்ட்டு வந்தேன். போறப்ப அளக்குறதுக்கு டேப் எடுத்திட்டு போகலையே.அதனால எவ்ளோ தொலைவுன்னு தெரியலங்க.


24 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எனக்கு எந்த தனித்திறமையும் கிடையாது. கூட்டுத்திறமையும் கிடையாதுங்க.


25.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னோட வலைப்பதிவைப்படிச்சிட்டு உம் முன்னு மூஞ்சியை வெச்சி இருக்கிறதை.


26 உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அது பாட்டுக்கு பேசாம தூங்கி கிட்டு இருக்கு. அதைப்போய் ஏங்க தட்டி எழுப்பறீங்க?


27. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மனுசப்பயலுங்க காலடி படாத காடு மலை அத்தனையும்.


28.எப்படி இருக்கணும்னு ஆசை?

'நான் கடவுள்' மாதிரி இருக்கணும்னு ஆசை.


29. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

கல்யாணம்தான்.


30.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வாழ்வுங்கறது ஒரு வால்வு மாதிரிங்க. தொறந்து இருந்தா வாழலாம். அடைச்சிகிட்டா போய் சேர வேண்டியதுதான்.


31..உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?


http://vidhoosh.blogspot.com/

எனக்கு அவங்க வலைப்பதிவிலேயே மிகவும் பிடிச்சது 'பக்கோடா பேப்பர்கள்....' ங்கற வலைப்பதிவோட தலைப்புல முதல் பாதிதான்.
(திங்கற சமாச்சாரமாச்சே.அதான். ஹி. ஹி).


32.இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்த‌க‌ம்?

'போலி சாமியார் ஆவது எப்படி?' ங்கற புத்தகம்.
(சீக்கிரமா சம்பாதிச்சு பெரிய ஆளா வரணும்னு முடிவு பண்ணிட்டேன். அதான்.)

5 comments:

  1. இதுக்குத்தான் அப்பு உங்களுக்கு அழைப்பு விடுத்தேன்.
    ஏமாத்தாமல் நல்லா சிரிக்க வச்சீங்க.

    ReplyDelete
  2. pakkaththilirukkum paddiyalaukku paaraaddukaL.

    ReplyDelete
  3. 2)அழுதாத்தான் திங்கறதுக்கு பலகாரம் கொடுப்பாங்களாம்ல?
    நிஜமாவா?.இல்லைனா தர மாட்டாங்களா?

    3)ஆனா என்ன எழுதினேன்னு எழுதினதுக்கப்புறம் எனக்கே புரியாது.

    கோழி கிறுக்கல் என்று சொல்லுங்க

    6)முதல்ல குளிக்கப் பிடிச்சாத்தானே அப்புறம் இந்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியும்?.
    ஹா ஹா ரசித்தேன்.ஆனாலும் பாவம் உங்க பக்கத்தில இருக்கிறவங்க

    12)சட்டையை துவைச்சாதான் ஒரிஜினல் கலர் தெரியும் னு சொல்றாங்களே.அப்படியா?
    ஆமாங்க அண்ணா அப்பிடி தான் சொல்றாக.ஆனால் பாவம் உங்களுக்கு உங்க நிறமே மறந்து போய் இருக்கும் உங்க கிட்ட போய் என்ன கேள்வி கேக்குறாக பாருங்க.

    18)எனக்குப்பிடிச்சது டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் படங்கள் மட்டும்தான்.
    உங்களுக்கு 40-45 வயசு ஆகுதுன்னு எல்லாருக்குமே தெரியும்
    அண்ணா,நீங்க டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் தான் பாப்பிங்க என்று சொன்ன போல உங்கள யாரும் பச்சை பிள்ளைன்னு சொல்லவா போறாக..?

    19)பர்ஸ்ல இருக்கிற என்னோட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.
    அட அம்புட்டு அழகாவா இருப்பீக.கண்ணு பட போகுதுண்ணா சுத்தி போட்டுக்கோங்க.

    21)நான் கொட்டாவி விடுறதுக்தே அலுப்பு படுவேன்.
    அப்போ எப்பிடி அண்ணா சாப்பிடுறீங்க?

    23)போறப்ப அளக்குறதுக்கு டேப் எடுத்திட்டு போகலையே.அதனால எவ்ளோ தொலைவுன்னு தெரியலங்க.
    அட அட என்ன ஒரு அறிவு.

    24)எனக்கு எந்த தனித்திறமையும் கிடையாது.
    மணி நேரமும் சாப்பிடுறதும் தனி திறமை தானுங்களே அண்ணா.

    25)என்னோட வலைப்பதிவைப்படிச்சிட்டு உம் முன்னு மூஞ்சியை வெச்சி இருக்கிறதை.
    யாரும் அப்பிடி வைச்சு இருக்க சான்ஸ் இல்லவே இல்லை.

    28)'நான் கடவுள்' மாதிரி இருக்கணும்னு ஆசை.
    முகமே தெரியாமல் தாடி மீசை வைச்சிட்டு புரியாத பாசை பேசவா?

    32)சீக்கிரமா சம்பாதிச்சு பெரிய ஆளா வரணும்னு.
    கவலையே வேணாம் அண்ணா இப்போ நீங்க செய்யுற வேலையை தொடர்ந்து செய்திட்டே இருங்க சீக்கிரம் பெரிய ஆளா வந்திடலாம்.என்ன வேலைன்னு பாக்குறிகளா அதான் அண்ணா சாப்பிடுற வேலை.

    ஹி ஹி சும்மா தமாசுக்காக தான் எழுதினான்.கோச்சுக்காதிங்க அண்ணா அப்புறம் நான் பக்கோடா வாங்கி தர மாட்டன் ஆமா ஹா ஹா

    ReplyDelete