Monday, February 16, 2009

பார்த்திபன் கனவு

























தும்பிக்கை உடைந்த யானை சிலை.
பந்திக்கு முந்தும் மாமிச மலை.

மல்லாக்கப் படுத்துறங்கும் மதயானை.
வானுயர்ந்த வயிறோ வண்ணான் பானை.

அவித்த முட்டை போன்ற
அழகிய இரு கண்கள்.

புறமுதுகு காட்டியதால்
உடலெங்கும் புண்கள்.

தார் ரோடு பிளந்தது போல்
தடித்த இரு உதடுகள்.

இவனது பின்னழகோ
இமயமலை முகடுகள்.

கூவத்தில் குப்புற விழுந்த
குள்ளம்பன்றியின் நிறம்.

தூரத்தில் நின்றாலும்
துர்நாற்றம் வரும்.

மாதம் ஒரு முறைதான்
பற்களை துலக்கிடுவான்.

மகாமகம் அன்று மட்டும்
மனமுவந்து குளித்திடுவான்.

கழுதை கனைத்தது போல்
கலகலப்பாய் சிரித்திடுவான்.

கடனைத் திருப்பிக்கேட்டால்
கண்ணாலே எரித்திடுவான்.

வாயைத்திறந்தாலே
வந்து கொட்டும் பொய்.

எந்த function க்கும் இவன்
வைத்ததில்லை மொய்.

ஊசிப்போன கொழுக்கட்டை
இவனுக்கு பிடித்தமான உணவு.

ஓசியிலே உலகம் சுற்றுவதே
இவனது நீண்ட நாள் கனவு.

1 comment:

  1. ம்ம்ம்ம்ம்ம்..... என்னவோ போங்க

    ReplyDelete